அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்

 1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்

2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி – பாரதிதாசன்

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் – அண்ணாமலை

4) காந்தீயக் கவிஞர் – நாமக்கல் கவிஞர்

5) சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்

6) உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் – மு.வரதராசனார்

7) சிலம்பு செல்வர் – ம.பொ.சிவஞானம்

8) சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுப்பிள்ளை

9) சொல்லின் செல்வன் – அனுமன்

10) தமிழ் தென்றல் – திரு.வி.க.

11) வள்ளலார் – ராமலிங்க அடிகளார்

12) கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

13) தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் – ஜி.யூ.போப்.

14) ஆசு கவி – காளமேகப் புலவர்.

15) எழுத்துக்கு – இளம்பூரணார்.

16) சொல்லுக்கு – சேனாவரையார்.

17) உரையாசிரியர் – இளம்பூரணார்.

18) உச்சிமேல் புலவர் கொள் – நச்சினார்க்கினியர்

19) தமிழ் வியாசர் – நாதமுனிகள் (அ) நம்பியார் நம்பி.

20) புதினப் பேரரசு – கோ.வி.மணிசேகரன்

21) ஏழிசை மன்னர் – தியாகராய பாகவதர்

22) மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்

23) கவிக்கோ – அப்துல் ரஹ்மான்

24) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை – கல்கி

25) தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி – அகத்தியர்

26) தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவைநனி சொட்ட சொட்ட பாடிய கவி,உத்தம சோழ பல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் – சேக்கிழார்

27) இலக்கண தாத்தா – மே.வி.வேணுகோபால்

28) முத்தமிழ்க்காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை

29) சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்

-புதுமைப்பித்தன்

30) தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்

31) தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி – அண்ணாதுரை

32) தமிழ்நாட்டு பெர்னாட்ஷா – மு.வரதராசனார்

33) புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி

34) தமிழ் தாத்தா – உ.வே.சா

35) தமிழ் நாடகத் தந்தை – சம்பந்த முதலியார்

36) தமிழ் நாடக தலைமையாசிரியர் ,நாடக உலகின் இமயம் – சங்கரதாஸ சுவாமிகள்

37) உவமைக் கவிஞர் – சுரதா

38) தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்

39) தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் – வீரமாமுனிவர்

40) குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன்.

41) கவி யோகி – சுத்தானந்த பாரதி.

42) தற்கால உரைநடையின் தந்தை – ஆறுமுக நாவலர்.

43) தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்

44) வில்லுப் பாட்டுக்காரர் – கொத்தமங்கலம் சுப்பு.

45) ஆசிய ஜோதி – நேரு

46) ஆசிய ஜோதி நூலை எழுதியவர் – கவிமணி

47) மூல நூலை எழுதியவர் – எட்வின் அர்னால்ட்

48) திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் – மாணிக்கவாசகர்

49) தமிழ்நாட்டின் அட்லி சேஸ் – சுஜாதா

50) தென்னாட்டு தாகூர் – வெங்கட ரமணீ

51) பண்டித மணி – கதிரேசன் செட்டியார்

52) சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் – காரைக்கால் அம்மையார்

53) வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி

54) பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி – பெரியாழ்வார்

55) தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. – அகிலன் (சித்திரப்பாவை)

56) தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் – தாயுமானவர்

57) கவிராட்சசன் – ஓட்டக்கூத்தர்

58) திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி

– பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)

59) நாட்டுப்புறவியலின் தந்தை – ஜேக்கப் கரீம்.

60) தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை – வானமா மாலை.

61) மண் தோய்ந்த புகழினான் – கோவலன்

62) வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் – ஆறுமுக நாவலர்

63) பொய்யா குலக்கொடி நதி – வைகை

64) கணக்காயர் என்பவர் – சோமசுந்தர பாரதியார்

65) நீதி நாயகர் – வேதநாயகம் பிள்ளை

66) கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்

67) முச்சங்கம் வளர்கூடல் நகர் – மதுரை

68) தமிழ் நந்தி – மூன்றாம் நந்தி வர்மன்

69) தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் – சீத்தலைச் சாத்தனார்

70) நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் – நக்கீரர்

71) தமிழ் கவிஞருள் அரசர் – திருத்தக்கதேவர்